100
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களிடமும் முடி உதிரும் பிரச்சனை வெகுவாக அதிகரித்து வருவதை காணலாம்.
உடலில் இரும்புச்சத்து குறைபாடு, ரத்தசோகை, மன அழுத்தம், தூக்கமின்மை, பொடுகு, உடல் சூடு மற்றும் அதிகளவிலான வெள்ளைப்போக்கு, முறையற்ற ரத்தப்போக்கு ஆகியவை முடி உதிர முக்கிய காரணியாக விளங்குகிறது.
மேலும் தலையை ஈரமுடன் வைத்திருப்பது, உப்பத் தண்ணீரில் குளிப்பது போன்றவையும் முடியை உதிரச் செய்யும்.
நல்ல தூக்கம், போதுமான அளவு தண்ணீர், சரிவிகித உணவு ஆகியவை இந்த சிக்கலில் இருந்து விடுபட எளிய வழியாகும்.
பழங்கள் மற்றும் நீராகாரம் சேர்த்துக்கொள்வதால், உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பதன் மூலம் உடற்சூட்டை தணிக்கலாம்.
மேலும் முருங்கைக்கீரையும் கறிவேப்பிலையும் முடி உதிர்தலை தடுத்து நிறுத்தும் முக்கிய காரணிகள் ஆகும்.
கறிவேப்பிலை, முருங்கைக்கீரை ஆகியவற்றை காயவைத்து பொடி செய்து தினமும் வெந்நீர் அல்லது மோரில் தலா 1 சிட்டிகை கலந்து குடித்து வர ஓரிரு மாதங்களில் முடி உதிர்வு நிற்கும்.
மேலும் முருங்கைக் கீரையை சூப் செய்தும், கறிவேப்பிலையை துவையல் செய்தும் கூட சாப்பிடலாம்.
1 comment
[…] பின்னர் முடியை அலச வேண்டும். கற்றாழையின் உள்ளே இருக்கும் ஜெல்லை […]