127
நம்மில் பலருக்கு வறண்ட தலைமுடி இருக்கலாம். ஆனால் நமது முடி பட்டு போன்று பளபளப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும்.
வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே வறண்ட தலைமுடியை மீட்டெடுத்து நமது முடியை பளபளப்பாகவும் திடமானதாகவும் மாற்ற முடியும்.
தேங்காய் எண்ணெய் தலைமுடியை பராமரிக்க மிகவும் உதவி செய்கிறது.
கொழுப்பு அமிலங்கள் உள்ள தேங்காய் எண்ணெய், முடிக்கு தேவையான ஈரப்பதத்தை கொடுக்கிறது.
எண்ணெயை சூடாக்கி இளம் சூட்டில் இருக்கும் போது தலையில் தடவி அரை மணி நேரத்திற்கு பின்னர் முடியை அலச வேண்டும்.
கற்றாழையின் உள்ளே இருக்கும் ஜெல்லை பிரித்தெடுத்து அதனை தலையில் தடவி அரைமணி நேரத்திற்கு பின்பு அலச வேண்டும்.
கற்றாழை, முடி வளர்ச்சிக்கும், முடி மென்மையாவதற்கும் உதவுகிறது.
அவகாடோ பழங்களில் உள்ள வைட்டமின் மற்றும் கொழுப்பு, முடி வளர்ச்சிக்கு உதவுகின்றன. இதனை மசித்து ஒரு சிட்டிகை ஆலிவ் எண்ணெயுடன் கலந்து முடியில் தேய்த்து 30 நிமிடங்களுக்கு பின் முடியை அலச வேண்டும்.
மேலும் தலைமுடியை வெப்பத்தில் இருந்து பாதுகாப்பது அவசியம் ஆகும்.
தினமும் தலைமுடியை அலசுவதையும் தவிர்க்க வேண்டும். இதனால் முடியானது பலவீனமாகிறது.
குளித்த பின்னர் முடியில் உள்ள ஈரத்தை உலர்த்த துண்டால் அழுத்தி துடைக்காதீர்கள். இதனால் தலைமுடி சேதமடைய வாய்ப்புகள் உள்ளது.
பருத்தியினாலான தலையணை உறை, முடியில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுகிறது. ஆதலால் பட்டினால் ஆன தலையணை உறையினை பயன்படுத்தவும்.