146
ஆண்ட்ராய்டு மொபைல் பயனாளர்களுக்கு தேவையற்ற விளம்பரங்கள் youtube மற்றும் facebook மூலம் வந்து கொண்டே இருக்கும்.
இதை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் பலர் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதற்கு ஒரு தீர்வு தற்போது கிடைத்துள்ளது.
உங்கள் மொபைலில் சில விடயங்களை செய்தால் நீங்கள் அந்த சிரமத்தில் இருந்து தப்பிக்கலாம்.
●மொபைல் செட்டிங்கில் (Setting) உள்ள கூகுள்-க்குள் சென்று மேனேஜ் அக்கவுண்ட் (Manage account) ஆப்ஷனை தொடவும்.
●பின்னர் திரையில் தெரியும் டேட்டா அண்ட் பிரைவசி (Data and Privacy) ஆப்ஷனுக்குள் சென்று Scroll செய்து My ad center-ஐ கிளிக் செய்யவும்.
●அதில் Personalist Ad-ஐ Turn off செய்யவும்.
பின்னர் Settings-க்கு சென்று கூகுளை கிளிக் செய்து Delete advertising ID என்பதை கிளிக் செய்து நீக்க வேண்டும்.
இதை செய்வதன் மூலம் தேவையற்ற விளம்பரங்களை நீங்கள் தவிர்க்கலாம்.