108
இந்திய மாநிலம் கேரளாவில் காதலன் வீட்டார் அதிக வரதட்சணை கேட்டதால் மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாரமூடு பகுதியை சேர்ந்தவர் ஷகானா (26).
மருத்துவ மேற்படிப்பு மாணவியான இவர், திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் Surgery பிரிவில் பட்டம் பயின்று வந்தார்.
ஷகானாவும், கொல்லம் கருநாகபள்ளியைச் சேர்ந்த மருத்துவர் ரூவாயிஸும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதல் விவகாரம் இருவரின் குடும்பத்திற்கும் தெரிய வர திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் தொடங்கிய நிலையில் வரதட்சணை குறித்த பேச்சை மணமகன் வீட்டார் எழுப்பினர்.
150 பவுன் தங்கம், 15 ஏக்கர் நிலம், BMW கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என அவர்கள் பெண் வீட்டாரிடம் கேட்டுள்ளனர்.
மேலும் வரதட்சணையை தர மறுக்கும் நிலையில் திருமணம் நின்று போகும் எனவும் மிரட்டியுள்ளனர்.
இதனைக் கேட்ட சஹானா அதிர்ச்சியடைந்துள்ளார். அத்துடன் அதிக அளவு மயக்க மருந்து எடுத்துக்கொண்டு அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார், மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மணமகன் ரூவாயிஸை கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் திருமணத்தில் வரதட்சணை கேட்டு மணமகன் வீட்டார் மிரட்டியதால் பெண் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.