94
பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவை போல் AI DeepFake தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.
இதனால் அதிர்ச்சியடைந்த ராஷ்மிகா இதுகுறித்து புகார் அளித்துதுடன், தனது X தளத்தில் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது பதிவில் “இதுகுறித்து பேசுவதற்கு வருத்தமாக உள்ளது. நான் மிகவும் வேதனைப்படுகிறேன். தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்துவது மிகுந்த பயத்தை உருவாக்குகிறது. ஒரு பெண்ணாகவும், நடிகையாகவும் என்னை பாதுகாக்கும், ஆதரவளிக்கும் என் நண்பர்களுக்கும், என் குடும்பத்திற்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால், நான் பள்ளி அல்லது கல்லூரி படிக்கும் போது இப்படி நடந்திருந்தால் எப்படி சமாளித்திருப்பேன் என்று என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இது போன்ற சம்பவங்களால் நம்மில் பலர் பாதிக்கப்படும் முன் இதை கவனிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும், இச்சம்பவம் குறித்து பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது X தளத்தில் “இதற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.