87
நில ஒற்றுமை தொடர்பான கலந்துரையாடல் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில், மனித உரிமை ஆணைக்குழுவின் வடபிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ், பேராசிரியர் சரோஜா சிவசந்திரன் மற்றும் அன்ரனி யேசுதாசன், விமலேஸ்வரி ஸ்ரீகாந்தறூபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டதுடன், வடக்கு கிழக்கைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு நில ஒற்றுமை மற்றும் தேசிய ஒற்றுமை தொடர்பான கருத்துக்களையும் வழங்கினர்.
மேலும், குறித்த விடயம் தொடர்பில் கருத்துரைகள் வழங்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து மீனவர்கள் தினத்தை முன்னிட்டு மீனவர்களின் விவகாரங்கள் தொடர்பிலும் கருத்து வெளியிடப்பட்டது.