74
இணையம் மற்றும் அது தொடர்பான சமூக வலைத்தள செயற்பாடுகளால் இடம்பெறும் சமூக மாற்றங்கள் பெரும்பாலும் பாதகமானவையாகவும் அதேநேரத்தில் தீங்கு விளைவிப்பவையாவுமே காணப்படுகிறன என் இலங்கை கலைக் கழகத்தின் நிறைவேற்று உறுப்பினர் தர்மானந்த விஜேசிங்க தனது தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கலாச்சாரம் மற்றும் புதிய இளைஞர்கள் எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடல் ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக் கலந்துரையாடலில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் இடம்பெறும் மேற்படி மாற்றங்கள் நாட்டின் விழுமியக் கட்டமைப்புகளை சேதப்படுத்தும். இந்த நிலைமை இளைஞர்களை கடுமையாகப் பாதிக்கின்றன – என்றார்.
மேலும், எவரேனும் தனது கட்சியின் கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தால், குறித்த நபர் சுற்றிவளைத்து தாக்கப்படுகிறார்.
அரசியல் குழுக்கள் மற்றும் அரசியல் அதிகாரத் திட்டங்கள் சமூக வலைத்தளங்களில் மாஃபியா வடிவில் இயங்கி வருகின்றன. இது மிகவும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்குகிறது என குழு சுட்டிக்காட்டியது.
அத்துடன், துப்பாக்கிச் சூடு போன்ற கணினி விளையாட்டுக்களால் குழந்தைகளின் மனம் பாதிக்கப்படுவதுடன் ஏனையவர்களைத் துன்புறுத்துவது சாதாரண விடயம் எனக் குழந்தைகளின் மனதில் பதிந்துவிடும். இதன்மூலம் பழிவாங்கல் போன்ற எண்ணங்கள் குழந்தைகளின் மனதில் விதைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மற்றும் ஒழுக்கமின்மை ஏற்படுவது தொடர்பிலும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, இக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட இளைஞர் பிரதிநிதிகள் முழு இளைஞர்களுக்கும் பொதுவான தலைமைத்துவப் பயிற்சி வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவது முக்கியானது எனத் தெரிவித்தனர்.