105
யாழ். மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி மணல் ஏற்றும் அனுமதிப் பத்திரங்களைப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணல் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்குரிய அனுமதிப் பத்திரங்களை கனியவளத் திணைக்களத்திடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.
குறித்த அனுமதிப் பத்திரங்களை போலியான முறையில் தயாரித்து பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைதாகியுள்ளனர்.
மணல் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட அனுமதிப் பத்திரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த பத்திரம் போலியானது என்று கண்டறியப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கிளிநொச்சி மற்றும் விசுவமடுவை பிரதேசங்களைச் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
போலியான அனுமதிப் பத்திரம் என்று தெரிந்தும் அதை வழங்கியமை மற்றும் அதனைப் பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, போலியான அனுமதிப் பத்திரம் ஒன்றுக்காக 15 ஆயிரம் ரூபா வரை அறவிடப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன் சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.