91
அருட்தந்தை கலாநிதி யோசுவா அவர்களின் ‘பூச்சாண்டி’ நாவல் நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று(18) கிளிநொச்சியில் இடம்பெற்றது.
இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில் 200 வருடங்களாக கூறி வந்த கதைகளையும் வரலாறுகளையும் இந்த நாவல் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
புதிய விவாதத்தை ஆரம்பித்துள்ள இந்த நாவல் வெளியீட்டு நிகழ்வு அருட்தந்தை பெனி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
நூல் அறிமுக உரையினை மு.தமிழ்ச்செல்வனும்,நூல் ஆய்வுரையினை மாவட்டச்செயலக உதவிதிட்டமிடல் பணிப்பாளர் அ. கேதீஸ்வரன் அவர்களும் ஆற்றினார்கள். நாவலை காவேரி கலா மன்றத்தின் தலைவர் வண. போதகர் அவர்கள் வெளியிட்டு வைக்க யாழ் பல்கலைகழக மாணவி ஒருவர் பெற்றுக்கொண்டார்.
1 comment
[…] நிலையில் வெளிநாட்டில் இருந்த போதகர் அண்மையில் நாடு திரும்பினார். மத […]