80
2024ம் ஆண்டு நடக்கவிருக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை நடத்தும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது.
அண்மையில் இந்தியாவில் நடந்து முடிந்த உலகக்கோப்பையில் இலங்கை கிரிக்கெட் அணி மோசமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியது.
இதனால் பலரும் கடுமையாக அணியை விமர்சித்தனர்.
அதனைத் தொடர்ந்து, யாரும் எதிர்பாராத விதமாக இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து உத்தரவிட்டார்.
அதன்பின்னர், கிரிக்கெட் வாரியம் என்பது தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்பது விதி ஆகும்.
ஆனால் அரசின் தலையீடுகள் இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் (SLC) இருப்பதால் அதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இடைநீக்கம் செய்தது .
இந்நிலையில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரை நடத்தும் வாய்ப்பினை இலங்கை இழந்துள்ளது.
அதாவது, U19 உலகக்கோப்பையை நடத்தும் பொறுப்பினை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தென் ஆப்பிரிக்காவுக்கு வழங்கியுள்ளது.
சிக்கலுக்கு மேல் சிக்கலுக்கு உள்ளாகி வருவதால் இலங்கை கிரிக்கெட்டுக்கு போதாத காலம் என இணையவாசிகள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
1 comment
[…] தொடரில் மோசமான ஆட்டத்தினால் இலங்கை கிரிக்கெட் அணியின் பல நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. […]