100
தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
சத்யஜோதி தயாரிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் மற்றும் பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் தயாராகியுள்ள “கேப்டன் மில்லர்” திரைப்படம், 2024 பொங்கல் திருநாளில் வெளியாகிறது.
இதற்காக படக்குழுவினர் வெளியீட்டுக்கு மும்முரமாக தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் உருவாகியிருக்கும் “கில்லர் கில்லர்” எனும் பாடல் 22ம் திகதி வெளியாகிறது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். முன்னதாக இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்தது.
2024 பொங்கலுக்கு கேப்டன் மில்லருக்கு போட்டியாக சிவகார்த்தகேயனின் அயலான், சுந்தர்.சியின் அரண்மனை 4 ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.