83
நவம்பர் 12ஆம் திகதி உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காஷியில் சுரங்கப்பாதை அமைக்கும்போது அதன் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் சுமார் 40 கட்டுமான தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் சிக்கினர்.
இதனைத் தொடர்ந்து, நார்வே மற்றும் தாய்லாந்தின் எலைட் மீட்பு குழுவினர் உதவியுடன் NDRF அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தது.
மீட்புக்குழுவினர் 30 மீட்டர் வரையிலான 5 துளைகளையிட்டு உள்ளே இருக்கும் தொழிலாளர்களுக்கான ஆக்ஸிஜன் மற்றும் உணவுகளை வழங்கி வந்தனர்.
இந்நிலையில், மீட்பு பணியில் 6ம் நாளாக மீட்பு படையினர் ஈடுபட்டு வந்தபோது சுரங்கத்தினுள்ளே பெரிய அளவில் உடைந்து விழும் சத்தம் கேட்டதால் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
உள்ளே இருப்பவர்கள் கதி என்ன என்று இன்னும் அதிகாரப்பூர்வமன அறிவிப்புகள் வெளிவராத நிலையில் அந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
கட்டப்பட்டு வரும் இந்த சுரங்கப்பாதையானது பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய புனித் தலங்களை இணைக்கும் பாதையாகும்.
1 comment
[…] மாநிலம் உத்தரகாண்டில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் அனைவரையும் பத்திரமாக […]