139
இந்திய மாநிலம் கேரளாவில் காதல் கணவன் வேறு பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததை தட்டிக்கேட்டதால், ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு அதை வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸாக வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆசிக் மற்றும் பவுசியா.
இவர்கள் இருவரும் 16 வயதிலேயே காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால் அது சட்டப்படி குற்றமாக கருதப்பட்டு ஆசிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர்களுக்கு குழந்தை இருப்பதாகவும், அது கர்நாடக ஆசிரமம் ஒன்றில் வளர்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பவுசியா சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் தங்கி, பாலாஜி நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்து வந்துள்ளார்.
ஆசிக்கும் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
பவுசியாவை சந்தித்து பேச கேரளாவில் இருந்து வந்திருந்த ஆசிக் குரோம்பேட்டையில் உள்ள லாட்ஜில் ரூம் எடுத்திருக்கிறார். இதில் இருவரும் தங்கியிருந்துள்ளனர்.
இதனையடுத்து மாலை 4 மணியளவில் ஆசிக் தனது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் தனது காதலியை கொன்று விட்டதாக புகைப்படத்துடன் கூடிய பதிவை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பவுசியாவின் தோழிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் தங்கியிருந்த லாட்ஜ் ரூமிற்க்கு சென்ற காவலர்கள், கழுத்து நெறிக்கப்பட்டு இறந்து கிடந்த பவுசியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தப்பி ஓடிய ஆசிக்கை தேடிவந்த நிலையில், அவரை பல்லாவரம் அருகே கைது செய்தனர்.
மேற்கொண்டு ஆசிக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் காதலித்து கல்யாணம் ஆனதாகவும், அவர்களுக்கு குழந்தை இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் சென்னைக்கு படிக்க வந்த பவுசியாவை அடிக்கடி ஆசிக் சந்திக்க வந்துள்ளார்.
அப்படி இந்த முறை சந்திக்கும்போது ஆசிக்கிற்கு வேறு பெண்களிடம் தொடர்பு இருந்ததை அறிந்துகொண்ட பவுசியா, அவரிடம் அதுகுறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் இருவரிடையே தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஆசிக், பவுசியாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
காதல் கணவனின் தவறை தட்டிக்கேட்டதால் மனைவியும், நர்சிங் மாணவியுமான பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
1 comment
wpstPcQwvTJRUWUwJUjHdV