122
உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் தனது கூந்தலுக்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
இந்திய மாநிலம் உத்தரப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஸ்மிதா ஶ்ரீவஸ்தவா (Smita Srivastava).
46 வயதாகும் இவர் உலகிலேயே மிக நீளமான கூந்தலை உடையவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
இவர் தன்னுடைய 14வது வயதில் கடைசியாக தனது முடியை வெட்டியுள்ளார்.
அதன்பிறகு முடி வெட்டுவதை தவிர்த்து வந்த ஸ்மிதிக்கு தற்போது 7 அடி மற்றும் 9 அங்குலம் நீளமுள்ள கூந்தல் இருக்கிறது.
இந்த நீளமான கூந்தலால் உலகின் மிக நீளமான கூந்தலை உடையவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இவர் ஏற்கனவே லிம்கா சாதனைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.
1980-களில் கதாநாயகிகள் நீளமான கூந்தலை வைத்திருப்பர். அவர்களால் ஈர்க்கப்பட்டு முடி வளர்க்க தொடங்கியதாகவும், நீளமான கூந்தல் பெண்களின் அழகை மேம்படுத்துகிறது என்றும் ஸ்மிதா கூறியுள்ளார்.
மேலும் இவர் வாரத்திற்கு இரண்டு முறை கூந்தலை அலசுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்.
முடியை அலச 30-40 நிமிடங்கள் ஆகும் என்றும், முடியை உலர்த்துதல், சிக்கு எடுத்தல், பின்னுதல் ஆகிய செயல்களுக்கு கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஆகும் என்றும் கூறியுள்ளார்.
அத்துடன் கின்னஸ் சாதனை படைப்பது தனது கனவாக இருந்தது என்றும், அது தற்போது நிறைவேறிவிட்டது என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.