83
இந்தியாவிற்கான ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசுகி இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
மும்பை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ததையும், அங்குள்ள மார்க்கெட்டிற்கு சென்று ஆடைகள் வாங்கியதையும் அவர் தனது சமூக வலைதளத்தில் பக்கத்தில் பகிர்ந்தார்.
மேலும், X தளத்தில் அவர் பிரியாணியை ருசித்து சாப்பிடும் புகைப்படத்தை பகிர்ந்து “2 நாட்களாக தொடர்ந்து லக்னோவில் பயணம் செய்து வருகிறேன். நான் சாப்பிட்டதிலேயே மிகச்சிறந்த பிரியாணி இதுதான்” என்றும் கூறியுள்ளார்.