99
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் போலி சுங்கச்சாவடி அமைத்து சுமார் 75 கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது.
குஜராத்தின் Bamanbore – Kutch தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் சுங்கச் சாவடி ஒன்று செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் நெடுஞ்சாலையில் இருந்து வாகனங்கள் திருப்பி விடப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் 1.5 ஆண்டாக போலி சுங்கச் சாவடி செய்யப்பட்டு வந்தது
அம்பலமானது.
வர்கசியா சுங்கச் சாவடி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்பட்டதால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.
இந்த மோசடி கும்பல் தனியார் நிலத்தில் சாலை அமைத்து, வரும் வாகனங்களை எல்லாம் பாதை மாற்றி திருப்பி விட்டுள்ளனர்.
இந்த மோசடி தொடர்பில் தனியார் நிறுவன உரிமையாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுங்கச் சாவடியில் இருந்த திடமான ஆசாமிகள் லொறி ஓட்டுநர்களிடம் டோல் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.