96
‘தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவெடுத்துள்ள காற்றழுத்த தாழ்வு நிலை எதிர்வரும் சில நாட்களில் புயலாக வலுப்பெறும்’ என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலைமையில், மாதிரிகளின் அடிப்படையில் இந்த புயலால் நேரடியான பாதிப்புக்கள் இலங்கையின் எந்தவொரு பகுதிக்கும் இல்லை. ஆயினும் எதிர்வரும் நாட்களில் ஏற்படுகின்ற நிலைமைகளைப் பொறுத்து இந்த நிலையில் மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த தாழமுக்கம் புயலாக மாறினால் இலங்கையின் வடக்கு, கிழக்கு, மற்றும் வடமத்திய மாகாணங்களின் பல பகுதிகளில் இன்று இரவு தொடக்கம் எதிர்வரும் 3ம் திகதி வரை கனமானது முதல் மிகக் கனமானது வரையான மழை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
இலங்கையின் வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் தென்கிழக்கு கடற்பகுதிகள் நாளை காலை தொடக்கம் மறு அறிவித்தல் வரை கொந்தளிப்பான நிலைமையில் காணப்படும். இந்நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.