120
தமிழக மாவட்டம் குமரியில் சக மாணவர்களுடன் கடற்கரைக்கு சென்றபோது மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சூலை மாதம் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு அருகே கல்லூரியில் படிக்கும் சக மாணவி ஒருவர், அவரது வகுப்பு தோழனுடன் வெளியில் சென்றுள்ளார்.
சின்னத்துறையை சேர்ந்த குறித்த மாணவன், தனது தாயின் பிறந்தநாளை பொழியூர் கடற்கரையில் குடும்பமாக கொண்டாட போகிறோம் நீயும் வரவேண்டும் என்று அழைத்துள்ளார்.
இதன் காரணமாக மாணவியின் பெற்றோரும் சக மாணவன், அதுவும் தாயின் பிறந்த நாள் கொண்டாட்டம் தானே என்று மாணவியை உடன் அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த மாணவியை அழைத்துச்செல்லும் வழியில் தூத்தூரை சேர்ந்த மற்றொரு வகுப்புத்தோழனும் உடன் இணைந்து கொண்டார்.
மூவரும் பொழியூர் கடற்கரைக்கு சென்றபோது அங்கே மாணவனின் குடும்பத்தினர் யாரும் இல்லாததால் மாணவி அதிர்ச்சியடைந்தார்.
மேலும் இருவரும் வாகனத்தில் கொண்டு வந்திருந்த மதுவை குடிக்க தொடங்கினர்.
மாணவி பயந்து தன்னை வீட்டில் விடும்படி கெஞ்சியுள்ளார்.
போதை தலைக்கேறிய நிலையில் சின்னத்துறையை சேர்ந்த மாணவன், மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதனை மதுபோதையில் பார்த்துக்கொண்டு இருந்த வேறு நபர்கள், அங்கே வந்து அந்த மாணவர்களை தடுத்து நிறுத்தியதுடன் அவர்களை நிர்வாணமாக்கி தாக்கியுள்ளனர்.
பின்னர் மாணவியிடம் கத்தியை காட்டி மிரட்டி, இரு நபர்களும் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
அதனை வீடியோவாகவும் எடுத்துள்ளனர். மாணவியின் எண்ணையும் வாங்கி வைத்துக் கொண்டனர்.
இந்நிலையில் வீட்டிற்கு வந்த மாணவியை மீண்டும் மீண்டும் தன் பாலியல் இச்சைக்கு இணங்க சொல்லி போன் செய்துள்ளனர். மறுத்தால் வீடியோவை வெளியிட்டுவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
இதனால் மாணவி தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இந்த நிலையில் அந்த நபர்கள் வீடியோவை இணையத்தில் வெளியிட்டனர்.
சமீபத்தில் அந்த மாணவிக்கு திருமணம் நிச்சயம் ஆகியிருந்த நிலையில் திருமணம் நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து தனக்கு நடந்த கொடுமையை, குளச்சல் மகளிர் காவல் நிலையம் மற்றும் பொழியூர் காவல் நிலையத்தில் மாணவி புகாராக அளித்துள்ளார்.
உடனடி நடவடிக்கை எடுத்த பொலிஸார், சின்னத்துறையை சேர்ந்த மாணவன் மற்றும் பாலியல் வன்புணர்வு செய்த கேரளாவை சேர்ந்த இரண்டு ஆசாமிகள் மீது வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.