புலமைப்பரிசில் பெறுபேறுகள் மீள் மதிப்பீட்டுக்காக வருகை தந்த ஆசிரியர்களுக்கு உரிய வசதிகள் கொடுக்கப்படாத நிலையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
வினாத்தாள் மதிப்பீட்டிற்காக தூர மாகாணங்களில் இருந்து வருகை தந்த ஆசிரியர்களுக்கு நேற்றிரவு (19) வரை தங்குமிட வசதி கொடுக்கப்படாமையால் ,பரீட்சை திணைக்களத்திற்கு அருகில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் மேலும் பல ஏனைய வசதிகள் செய்து கொடுக்கப்படாமையால் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில ஆசிரியர்கள் தங்கும் இடங்களைத் தேடி பெரும் பணத்தைச் செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புலமைப்பரிசில் பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்காக நாடளாவிய ரீதியில் வினாத்தாள்களை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு மூன்று நாட்களுக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பரீட்சை திணைக்கள அதிகாரிகள் தங்களை மிகவும் தரக்குறைவாக நடத்தியதாகவும், பரீட்சை திணைக்கள அதிகாரிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றதாகவும் ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.