அரசாங்கத்திடம் இருந்து மட்டும் இஸ்ரேலிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதால் இடைத்தரகர்களிடம் பணம் செலுத்த வேண்டாம் என அமைச்சர் மனுஷ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் பணம் பெறுபவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக அறிவிக்குமாறும் அமைச்சர் வோண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரின் செயலாளர்கள் போல் பாவனை செய்து இஸ்ரேலில் தொழில் வழங்குவதாக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மோசடியான முறையில் பணம் பெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இஸ்ரேலிய விவசாய வேலை வாய்ப்புகள் அரசாங்கத்திடம் இருந்து மட்டுமே கிடைப்பதால், அந்த வேலைகளுக்காக இடைத்தரகர்களிடம் பணம் செலுத்துவதைத் தவிர்க்குமாறும், அமைச்சர் மனுஷ நாணயக்கார கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேலில் விவசாயத் துறையில் தொழில் வாய்ப்புகளைப் பெற்ற இலங்கையர்களில் முதல் குழுவாக 80 இளைஞர்கள் இன்று இஸ்ரேலுக்குப் புறப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளமௌ குறிப்பிடத்தக்கது.