73
அன்றாடம் அதிகரித்து வரும் சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில், தற்போதைய சமூகத்தில் இடைவிடாத போட்டி காணப்படுகிறது என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
மேலும், இப் போட்டி காரணமாக இளந்தலைமுறை மன அழுத்தத்திற்கு செல்ல வேண்டிய நிலமை காணப்படுகிறது.
எனவே மனவளக்கலை துறையில் பயிற்சித் திட்டங்களில் அதிக கவனம் செலுத்துவது அவசியமானது.
கட்டுப்பாடற்ற இணைய பாவனை மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் தவறான பாவனை நாட்டில் சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற பல சமூகப் பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளது.
வளர்ந்த நாடுகளில், இணையம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் விதிமுறைகளுடன் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இங்கு இதற்கு கட்டுப்பாடு கிடையாது.
உள்ளூர் மட்டத்தில் ஏற்படும் சமூகப் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவதற்கு நாடளாவிய ரீதியில் ஆய்வுகளை மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பாடசாலை பாடத்திட்டத்தில் பொருத்தமான முறையில் பாலியல் கல்வி சேர்க்கப்பட வேண்டும். – என்றார்.
சிறுவர் துஷ்பிரயோகம் தடுப்பு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்படி தெரிவித்தார்.