ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இணைந்து எதிர்காலத்தில் பயணிக்கப்போவதாக அண்மைக்காலமாக -தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இந்நாட்களில் அப்பட்டமான பொய்கள் உலாவருவதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து தான் ஊடகம் என்ற சொல்லினை பாவிக்கப்போவதில்லை என்றும் பொய்யான அப்பட்டமான கீழ்த்தரமான வேலைகளை பிரச்சாரம் செய்யும் நிறுவனங்கள் உள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் ஒருபோதும் ரணிலும் சேர்ந்து பயணிக்கப்போவதில்லை என்றும் பொய்யான பிரச்சாரங்களை செய்ய வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.