84
இலங்கை தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான அனைத்து பண்ணைகளையும், இந்திய நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு வழங்கப்படவுள்ளது.
இரண்டு இந்திய மற்றும், இலங்கை நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டு முயற்சிக்காக இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான 32,000 ஏக்கர் பரப்பளவுடைய 32 பண்ணைகள் குத்தகைக்கு வழங்கப்பட தீர்மானிக்கப்படவுள்ளது.
மேலும், விலங்குகள் மற்றும் நிலங்களின் மதிப்பீடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பில், கண்காணிப்புச் சுற்றுப்பயண நடவடிக்கைக்காக,
இந்தியாவின் அமுல் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று, சம்பந்தப்பட்ட பண்ணைகளுக்கு அண்மையில் சென்றுள்ளனர்.
இலங்கையில், கால்நடை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன், NLDB மற்றும் Milco ஆகிய நிறுவனங்கள் பல வருடங்களுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்டன. இருப்பினும் எதிர்பார்த்த அபிவிருத்தி ஏற்படவில்லை என தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் பேராசிரியர் எச்.டபிள்யூ.சிறில் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையிலுள்ள கால்நடைகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது எனத் தெரிவித்து, பால் பண்ணையாளர்களின் சங்கப் பிரதிநிதிகள் அடிக்கடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.