84
விமான எரிபொருள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனமான Cannel Pvt Ltd, விரைவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சேமிப்பக வசதியை நிர்மாணிக்க உள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இதன்படி, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் எரிபொருள் சேமிப்பகத்தை நிர்மாணிப்பதற்கு நிலத்தை கடனாக வழங்குவதற்கு குறித்த நிறுவனத்திற்கும் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபைக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இத் திட்டத்துக்காக தொழில்நுட்ப மதிப்பீட்டு குழு மூலம் முதலீட்டாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.