96
2022ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு அவர்கள் தெரிவுசெய்யப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் பாடநெறி தொடர்பில் குறுஞ்செய்தி மூலம் இன்று அறிவிக்கப்படும் – என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
2022ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு 274,304 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளனர். இவர்களில் 166,967 பரீட்சார்த்திகள் தமது ஆரம்பத் தகைமையை பூர்த்திசெய்துள்ளனர்.
இந்நிலையில் பல்கலைக்கழக அனுமதிக்கு 84,176 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இருப்பினும் 45,000 மாணவர்கள் இந்த வருடம் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இதன்படி, உயிரியல் அறிவியலுக்கு 9,896 பேரும், இயற்பியலுக்கு 8,071 பேரும், வணிகத்துறைக்கு 7,850 பேரும், கலைப்பிரிவுக்கு 11,780 பேரும் பொறியியல் தொழில்நுட்பத்துறைக்கு 2,295 பேரும் உயிரியல் தொழில்நுட்பத்துறைக்கு 1,536 பேரும் மற்றும் மேற்கூறிய எந்தவொரு பாடத்திற்கும் தொடர்பில்லாத 719 மாணவர்களும் முதற்கட்டத்தில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்ய எதிர்ப்பார்க்கப்படுகிறது என பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்தார்.