87
சிரேஸ்ர ஊடகவியலாளர் இரா. துரைரத்தினம் அவர்களின் ‘கிழக்கில் சிவந்த சுவடுகள்’ என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த 4ம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சிரேஷ்ட ஊடகவியலாளர் செ. பேரின்பராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
கிழக்கு நிலப்பரப்பில் கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பான ஆவண நூலாக வெளியிடப்பட்ட இந்நூலில் கிழக்கின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தமிழ், சிங்கள , முஸ்லீம் மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பிலான தகவல்கள் திரட்டாக ஆதாரங்களுடன் இடம்பெற்றிருக்கிறது.