79
வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
தகவல் பரிமாற்றத்திற்கு உகந்த செயலிகளில் மக்களின் முதல் தேர்வு வாட்ஸ்அப் ஆக தான் இருந்து வருகிறது.
வாட்ஸ்அப் நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அம்சங்களை வழங்கி வருகிறது.
வாட்ஸ்அப்-யிலேயே பணப்பரிமாற்றம் செய்யும் முறை, ஒரு முறை மட்டும் புகைப்படத்தை பார்க்கும் வசதி, வாட்ஸ்அப் சேனல்கள் ஆகிய அம்சங்களை வழங்கி வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றது.
இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் மெசேஜ்களை எடிட் செய்யும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பாக அனுப்பிய மெசேஜில் எழுத்துப்பிழை இருந்தாலோ அல்லது Auto correct முலம் தவறுகள் ஏற்பட்டிருந்தாலோ, அந்த மெசேஜை முழுமையாக அழித்துவிட்டு மீண்டும் அனுப்ப வேண்டும்.
ஆனால், இப்போது அதை எடிட் செய்யும் வசதியால் அதனை சரிசெய்ய முடியும். அனுப்பப்பட்ட மெசேஜை Long press செய்வதன் மூலம் இந்த வசதியை பெற முடியும்.
எடிட் (Edit) செய்யும் அம்சத்தை பயன்படுத்தி மெசேஜை 15 நிமிடங்களில் எடிட் செய்து கொள்ள வேண்டும்.
மேலும், வாடிக்கையாளர்களுக்கு மாற்று சுயவிவர தனியுரிமை மற்றும் திகதி வாரியான தேடல் போன்ற அம்சங்களை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.