109
நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தை தகுந்த முறையில் கூட்டமைப்பிற்கு புதிய ஏற்றுமதித்துறை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மேலும் குறித்த செயற்பாட்டுக்கு புதிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டியது அவசியம். அத்துடன் புதிய முதலீட்டாளர்களுக்கான வசதிளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும்.
இதேவேளை, நாட்டில் விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போதுள்ள விவசாய ஆய்வு நிறுவனம் மறுசீரமைத்து, நவீனமயப்படுத்தப்படவுள்ளது எனவும் ஐனாதிபதி தெரிவித்தார்.
நேற்றையதினம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 25 வது ஜனாதிபதி ஏற்றுமதி விருது விழாவிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்படி தெரிவித்தார்.
2 comments
[…] எதிரான செயற்பாடாகும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தத் தவறை 2024ம் ஆண்டு வரவு செலவுத் […]
[…] […]