82
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் மீள்பரிசீலனை தொடர்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மீள்பரிசீலனை செய்வதற்கான முறையீடுகளை நவம்பர் 27 முதல் டிசம்பர் 4 வரை ஒன்லைனில் இணையத்தளத்தில் மேற்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் கடந்த நவம்பர் 16ம் திகதி வெளியிடப்பட்டதுடன், ஒவ்வொரு மாவட்டத்தின் சிங்கள, தமிழ் மொழி மூலமான வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.