இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு இந்த வருடத்திற்கான மேலதிக போனஸ் கொடுப்பனவு அல்லது ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மின் சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த தகவலை அறிவித்துள்ளார்.
இந்நிலையில் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் 25% சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்த வேண்டாம் எனவும் அமைச்சர் மேலும் பணிப்புரை விடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதனைதொடர்ந்து, மின்சார சபை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பல்வேறு ஊக்கத்தொகைகள், கொடுப்பனவுகள் மற்றும் அதிகாரிகள் வாடகைக்கு எடுத்த வாகனங்கள் மற்றும் வாடகையாக செலுத்தப்பட்ட பணம் குறித்த அறிக்கையை வழங்குமாறும் மின்சார சபைத் தலைவரிடம் அமைச்சர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.