87
இலங்கையில் சீனி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நுகர்வோர் விவகார அதிகார சபையின் கூற்றுப்படி, சுமார் 19,000 மெட்ரிக் தொன் சீனி நாட்டில் கையிருப்பில் உள்ளது. நாட்டில் சீனி இருப்புக்கள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை வழக்கமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
ஆனால் சீனி வர்த்தகர்கள் தாம் இலாபம் ஈட்ட பல்வேறு தந்திரங்களை பயன்படுத்துகின்றனர். சீனி இருப்புக்கள் தீரும் வரை அரசாங்கம் சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலையை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.