78
வெளிநபர்களை கூட்டங்களுக்கு அழைக்க தனது அனுமதி பெறப்பட வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று தெரிவித்தார்.
சகல குழுக்களின் தலைவர்களும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், குழுக் கூட்டங்கள் நிகழும் போது அவற்றில் வெளிநபர்கள் பங்கேற்பது குறித்து தனக்கு முறைப்பாடுகள் வந்துள்ளன எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.
அத்துடன், தனிப்பட்ட தேவைகளுக்கு உத்தியோகபூர்வ லெட்டர்ஹெட்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் சபாநாயகர் குழுத் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.