75
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது. குறித்த அகழ்வு பணியானது, முன்பு திட்டமிட்டப்படி, இன்று தொடக்கம் தொடர்ச்சியாக இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவா தெரிவிக்கையில், குறித்த அகழ்வு பணிகள் இன்றையதினம் காலை 8 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இம்முறை அகழ்வு பணி நடைபெறும்போது, ரேடர் கருவியை அனுமதியுடன் பரீட்சித்து பார்க்க எதிர்பார்த்துள்ளோம். இதன் மூலம் எவ்வளவு ஆழத்திற்கு குறித்த புதைகுழி உள்ளது என்பதை அடையாளப்படுத்தி கொள்ளமுடியும்.
இந்த அகழ்வு பணிகளுக்கான 2.5 மில்லியன் ரூபா வரையான நிதி காணப்படுகிறது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த நிதி இரண்டு வாரங்களுக்கு அகழ்வு மற்றும் ஏனைய பணிகளை மேற்கொள்ள போதுமானதாக இருக்கும். – என்றார்.