114
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம்நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான நேற்றைய தினம் மாலை வசந்த மண்டப பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
தொடர்ந்து வள்ளி, தேவசேனா சமேதராக கைலாச வாகனத்தில் முருகப் பெருமான் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து ஆலய முன்றலில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான சொக்கப்பனை எரிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து முருகப் பெருமான் வெளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.