164
சத்தீஸ்கரில் இளம்பெண்ணை கடத்தி வன்புணர்வு செய்து கொன்று புதைத்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலத்தின் கோர்பா மாவட்டத்தில் 28 வயதுடைய இளம்பெண், கடந்த செப்டம்பர் 28ஆம் திகதி மாயமானார்.
நகரத்திற்கு சென்ற பெண்ணை நெடுநேரம் ஆகியும் காணாததால், அச்சமடைந்த அப்பெண்ணின் தந்தை கோர்பா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனிடையே பெண்ணின் தந்தைக்கு போன் செய்த மர்ம நபர்கள், அவரது மகளை கடத்தி வைத்திருப்பதாகவும், 15 லட்சம் பணம் கேட்டும் மிரட்டியுள்ளனர்..0
இதனை விசாரணையில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் போன் செய்யப்பட்ட சிக்னலை வைத்து இடத்தை கண்டறிந்து, சம்பவத்தில் ஈடுபட்டதாக 5 நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியபோது சோனு லால் சாஹூ (27) இளம்பெண்ணை கடத்திச்சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறியுள்ளார்.
பின்னர், அப்பெண்ணின் கழுத்தை நெறித்து கொன்றதாகவும், சடலத்தை நண்பர்களின் உதவியுடன் கெரஜாரியா காட்டுப்பகுதியில் புதைத்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து கெரஜாரியா காட்டுப்பகுதியில் அந்த நபர்கள் அடையாளம் காட்டிய இடத்தில் தோண்டி, பெண்ணின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.