76
இந்திய மாநிலம் கேரளத்தில் உள்ள ஆலுவா பகுதியில் கடந்த சூலை மாதம் 27ஆம் திகதி 5 வயது சிறுமி மாயமானார்.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பொலிசார் சிறுமியைத் தேடிவந்தனர்.
இந்த நிலையில் சிறுமி காணாமல் போன மறுநாள், ஆலுவாவில் உள்ள உள்ளூர் மார்கெட் அருகே சதுப்புநிலப் பகுதியில் ஒரு சாக்குப்பையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது.
அது மாயமான சிறுமியின் சடலம் என தெரிய வந்தது. உடலைக் கைப்பற்றிய பொலிசார், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
அதன் அறிக்கையில், சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை செய்தபோது, சிறுமிக்கு நபர் ஒருவர் ஜுஸ் வாங்கி கொடுத்து கடத்தி சென்றது தெரியவந்தது.
மேலும் அந்த சிறுமியை கடத்திக் கொண்டு திருச்சூர் நோக்கி சென்ற பேருந்தில் ஒருவர் ஏறி சென்றதும் சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியானது.
அதனைத் தொடர்ந்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அசாஃபக் அலாம் என்பவரைக் கைது செய்த பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதன்முடிவில் சிறுமியை அவர், வன்புணர்வு செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து போக்சோ நீதிமன்றம் விசாரணை நடத்தி, கடந்த 4ஆம் திகதி அசாஃபக் அலாம் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று அவருக்கு மரண தண்டனை வழங்கி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. குழந்தைகள் தினமான இன்று, அந்தக் குழந்தையைக் கொன்ற அசாஃபத்துக்கு போக்சோ நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையைப் பலரும் வரவேற்றுள்ளனர்.
1 comment
[…] சத்தீஸ்கரில் இளம்பெண்ணை கடத்தி வன்புணர்வு செய்து கொன்று புதைத்த சம்பவம் […]