98
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வற் வரி 18 வீதமாக உயர்த்தப்படவுள்ளது. இதனால் கையடக்கத் தொலைபேசிகளின் விலைகள் கணிசமாக உயரும் என இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் சமித் சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், இதுவரை காலமும் கையடக்கத் தொலைபேசிகளுக்கு வற் அறவிடப்படவில்லை. டொலரின் பெறுமதிக்கு ஏற்ப கையடக்க தொலைபேசிகளின் விலைகள் மாறுபட்டு வந்தன.
தற்போது இலங்கையில் கையடக்கதொலைபேசிகள் வாங்குவது குறைவடைந்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் கையடக்க தொலைபேசி விற்பனை 18 வீதத்தால் குறைவடைந்துள்ளது.
இந்நிலையில், தற்போது அமுலில் உள்ள 15 சதவீத வற் வரி, 18 சதவீதமாக அதிகரிக்கவுள்ளது. அத்துடன் டொலரின் பெறுமதி மாற்றம் ஆகிய காரணங்களால் கையடக்கதொலைபேசிகளின் விலைகள் அதிகரிக்கும் – என்றார்.