134
வெட் வரி திருத்தச் சட்டமூலம் அதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி வெட் வரி திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் பதிவாகியிருந்தன.
இந்நிலையில் பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலம் இன்று (11) மீண்டும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில்இ கோரமின்மையால் நாடாளுமன்ற அமர்வு நேற்று ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலத்தை முறையான விவாதம் இன்றி நிறைவேற்றுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி நேற்று நாடாளுமன்றில் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.