68
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் தனி ஒருவனாக நின்று இரட்டை சதம் விளாசி வெற்றியை பறித்தார் அவுஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஆட்டம் ஆப்கானிஸ்தான் பக்கம் தான் என்று பலர் நினைத்த நிலையில், களத்தில் இருந்த மேக்ஸ்வெல் ருத்ரதாண்டவம் ஆடினார்.
அவர் 128 பந்துகளில் இரட்டை சதம் விளாசி 201 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றியடைய வைத்தார். இதில் 21 பவுண்டரிகளும், 10 சிக்சர்களும் அடக்கம்.
சேசிங்கில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பஹார் ஜாமன் (193) சாதனையை மேக்ஸ்வெல் இந்தப் போட்டியில் முறியடித்தார்.