95
உலகக்கோப்பை அரையிறுதியில் அவுஸ்திரேலிய அணிக்கு 213 ரன்களை தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்துள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது வரும் உலகக்கோப்பை அரையிறுதியில் தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஸ்டார்க், ஹேசல்வுட்டின் மிரட்டலான பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்க விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
அந்த அணி 44 ரன்களுக்கு 4 விக்கெட் என தடுமாறியபோது மழை குறுக்கிட்டது. பின்னர் ஆட்டம் தொடர்ந்தபோது கிளாசென் மற்றும் மில்லர் அணியின் ஸ்கோரை உயர்த்த போராடினர்.
கிளாசென் 48 பந்துகளில் 47 ரன் எடுத்திருந்தபோது ஹெட் ஓவரில் போல்டு ஆனார்.
அதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொதப்பினாலும் மில்லர் மட்டும் ஒற்றை ஆளாய் சிக்ஸர், பவுண்டரிகளை விளாசினார்.
மொத்தம் 116 பந்துகளை எதிர்கொண்ட மில்லர் 101 ரன் எடுத்து அவுட் ஆனார். அவரது ஸ்கோரில் 5 சிக்ஸர், 8 பவுண்டரிகள் அடங்கும்.
கடைசி விக்கெட்டாக ரபாடா வெளியேற, தென் ஆப்பிரிக்கா 212 ரன்கள் எடுத்தது. கம்மின்ஸ், ஸ்டார்க் தலா 3 விக்கெட்டுகளும், ஹேசல்வுட் மற்றும் ஹெட் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.