80
உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் இந்திய அணி குவைத்தை வீழ்த்தியது.
2026ல் FIFA உலகக்கோப்பை கால்பந்து நடக்கவிருக்கிறது.
இதனை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து நடத்துகின்றன.
தற்போது உலகக்கோப்பையில் பங்கேற்க தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இவற்றில் வெற்றி பெறும் நாடுகள் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கும் தகுதி பெறும்.
தகுதிச்சுற்று ஆட்டங்களுக்காக இரண்டாம் சுற்று பிரிவு A-யில் கத்தார், இந்தியா, குவைத் மற்றும் ஆப்கனிஸ்தான் ஆகிய அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று இந்தியா தனது முதல் ஆட்டமாக குவைத்துடன் நேற்று மோதியது.
இப்போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல்கள் எதுவும் அடிக்கவில்லை.
இதனை தொடர்ந்து நடந்த இரண்டாம் பாதியின், 75வது நிமிடத்தில் இந்தியாவின் மன்வீர் சிங் கோல் அடித்தார்.
இதன்மூலம் இந்தியா முன்னிலை பெற்றது. அவரது கோல் இந்திய அணியின் வெற்றிக்கான கோல் ஆக மாறியது.
ஆட்டத்தின் முடிவில் குவைத் அணி ஒரு கோல் கூட அடிக்காததால் இந்தியா 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.