118
குளிர்காலம் வந்தாலே பலருக்கு சளி, இருமலுடன் சைனஸும் வந்து சேர்ந்துவிடும்.
இது அசௌகரியத்தையும் வலியையும் ஏற்படுத்தும்.
மூக்கின் பின்புறம், கன்னத்து எலும்புகள், நெற்றி மற்றும் கண்களுக்கு இடையில் உள்ள காற்றுப் பைகள், சைனஸ்கள் எனப்படும்.
இவை குறிப்பிட்ட வெப்பநிலையில் நுரையீரலுக்கு சுவாசத்தை எடுத்துச்செல்லும்.
மேலும் இந்த சைனஸின் புறணி சளியை உற்பத்தி செய்கிறது.
புறணியில் ஏற்படும் அழற்சியானது அதிக சளியை உருவாக்கும்
சைனஸ் திரவத்தால் நிரப்பப்படும் போது தொற்று ஏற்படும்.
இது சைனசிடிஸ் என்று அழைக்கப்படுகிறது.
குளிர்காலங்களில் பிரச்சினை கொடுக்கும் இவற்றை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சரிசெய்ய முடியும்.
யூகலிப்டஸ் தைலம் விட்டு சூடான நீரில் ஆவி பிடிப்பதன் மூலம் சுவாச பாதையில் உள்ள அடைப்புகள் நீங்கும்.
ஆப்பிள் சீடர் வினிகர் ஒரு சிட்டிகை எடுத்து மிதமான சூட்டில் உள்ள ஒரு கோப்பை நீரில் கலந்து குடித்தால் விரைவில் சைனஸ் குணமடைய வழிவகுக்கும்.
மேலும், மஞ்சள் தூள் அல்லது மிளகுத் தூளை ஒரு சிட்டிகை அளவு எடுத்து மிதமான சூட்டில் உள்ள ஒரு கோப்பை நீரில் கலந்து குடிக்கலாம்.
மஞ்சள் மற்றும் மிளகு ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளதால் இது உடலை சுத்தப்படுத்தி, குணப்படுத்த பயன்படுகிறது.
(மேற்கண்ட குறிப்புகள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகவும்)