88
பெண்கள் மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு உண்டாவதால் அதிகப்படியான உடல் சோர்வு ஏற்படுவதையும் பலவீனமாக இருப்பதையும் காண முடிகிறது.
அதிகப்படியான இரத்தப்போக்கை கட்டுப்படுத்தவும், உடல் சோர்வை நீக்கவும் உணவில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சரிசெய்யலாம்.
மாதவிடாய் சுழற்சியில் மாதவிடாய் ஆகும் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே சத்தான உணவுகளை சேர்த்துக்கொள்வதன் முலம் சோர்வை தவிர்க்கலாம்.
மாதவிடாய் காலத்தில் இரும்புச்சத்து, புரோட்டின், கால்சியம் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்வது அவசியம் ஆகும்.
சிறுதானிய உணவுகள், பழங்கள், காய்கறிகள், கீரைகள், மற்றும் உலர் விதைகள் மற்றும் கொட்டைகள் ஆகியன உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது.
இவற்றை உண்டு வருவதன் மூலம் பெண்களால் மாதவிடாய் காலத்தை வலியில்லாமல் கடக்க முடியும்.
முருங்கைக் கீரை, ஆளி விதைகள், ராகி மற்றும் உளுந்தில் செய்தஉணவுகள், வெந்தயம் ஆகியவற்றை உள்ளடக்கிய உணவு முறை பெண்களின் மாதவிடாயை வலியின்றி, சக்தியுடன் கடக்க உதவுகிறது .
மேலும் மாதவிடாய் காலத்தில் மஞ்சள், இஞ்சி, பூண்டு, மிளகு, சுக்கு ஆகியவற்றை உணவில் சேர்த்து வந்தால் நச்சுக்கள் உடலில் அண்டாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
1 comment
[…] வந்தாலே பலருக்கு சளி, இருமலுடன் சைனஸும் வந்து சேர்ந்துவிடும். இது […]