86
யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் வழமைக்கு மாறாக அதிகளவு பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
அண்மையில் பொலிஸாரின் சித்திரவதையால் உயிரிழந்த வட்டுக்கோட்டை இளைஞன் நாகராசா அலெக்ஸின் விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதிமன்றில் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. இந் நிலையிலேயே நீதிமன்றில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இளைஞன் மரணம் தொடர்பான விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்று பரிசோதனை கடந்த திங்கட்கிழமை யாழ்.போதனா வைத்திசாலையில் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நீதவான் வைத்தியசாலைக்கு நேரில் என்று சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனை தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
தொடர்ந்து யாழ்ப்பாண சிறைச்சாலைக்கும் சென்று , வாக்குமூலங்களை பெற்று இருந்தார்.
இந்நிலையில், குறித்த வழக்கு இன்றைய தினம் மன்றில் எடுத்து கொள்ளப்படவுள்ளது.
சிறைச்சாலை அத்தியட்சகர், சட்ட வைத்திய அதிகாரி மற்றும் கொலையான இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் ஆகியோர் நீதிமன்றில் தோன்றி தமது சாட்சியங்களை வழங்கவுள்ளனர்.
இதேவேளை சட்ட வைத்திய அதிகாரி , உடற்கூற்று பரிசோதனை அறிக்கையையும் மன்றில் சமர்ப்பிக்கவுள்ளார்.
உயிரிழந்த இளைஞனுக்காக பெருமளவான சட்டத்தரணிகள் முன்னிலையாகவுள்ளனர்.
1 comment
[…] பல்கலைக்கழக பீடாதிபதிகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், […]