அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக் கணிதப் போட்டியில் இலங்கை சார்பில் பங்குபற்றிய மன்னார் மாவட்டத்தில் இருந்து சென்ற 5 மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
டிசம்பர் 3ம் திகதி இடம்பெற்ற குறித்த போட்டியில் உலகலாவிய ரீதியில் 80 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 500 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இந்தப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 62 மாணவர்கள் பங்குபற்றினர்.
மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 5 மாணவர்கள் கலந்துகொண்ட நிலையில், வெற்றிக் கிண்ணங்களை வென்றுள்ளனர்.
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களான எஸ். சிறோன்றாஜ் D பிரிவில் பங்குபற்றி 2ம் இடத்தையும், மாணவன் வி.செஸான் 3ம் இடத்தையும், லஸால் கிட்ஸ் கேம்பஸில் கல்வி கற்கும் மாணவி ஜே.ரெறா ஜெசாரி 3வது இடத்தையும், யோசப் வாஸ் ஆங்கிலப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் கே.அறிஸ்மித் 3வது இடத்தையும், தோட்டவெளி பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி ஆர். ரியானா 3ம் இடத்தையும் பெற்று மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.