இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன சந்தித்தார்.
இந்த சந்திப்பு புது டெல்லி நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் வளர்ச்சி பாதையில் இலங்கை தொடர்ந்து முக்கிய பங்காளியாக இருக்க வேண்டும் என பிர்லா வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது இரு நாடுகளும் பொருளாதார ரீதியிலும் சுற்றுலாத் தலங்களிலும் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிர்லா, நீண்ட காலமாக வளர்க்கப்பட்ட உறவுகள் காலப்போக்கில் வலுவடையும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
இதனைதொடர்ந்து அண்டை நாடுகள் மட்டுமல்ல, வரலாறு, கலாசாரம் மற்றும் ஜனநாயக விழுமியங்களின் பாதுகாவலர்கள் என்றும் அவர் கூறினார்.