82
போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு உதவும் விதமாக இந்தியா 32 டன் உதவிப்பொருட்களை வழங்கியுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் போர், குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியுள்ளது.
மாதக்கணக்கில் போர் நீடிப்பதால் உணவு, மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கூட பாலஸ்தீன மக்களுக்கு அரிதாகிப் போனது.
இந்நிலையில் பாலஸ்தீனத்திற்கு இரண்டாவது முறையாக இந்தியா உதவி செய்துள்ளது.
விமானம் வழியாக பாலஸ்தீனத்திற்கு கூடாரங்கள், மருந்து மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் உட்பட 32 டன் அளவிளான பொருட்களை எகிப்திற்கு அனுப்பியுள்ளது.
எகிப்து – காசா இடையேயான ரஃபா எல்லை வழியாக பாலஸ்தீனத்திற்கு பொருட்கள் அனுப்பப்படும்.
பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில், பாலஸ்தீன சனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டுக்கொண்டதன் பேரில் இந்த உதவிகள் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக அக்டோபர் மாத இறுதியில் முதல்கட்டமாக 6.5 டன் உதவிப்பொருட்களை இந்தியா வழங்கியது குறிப்பிடத்தக்கது.