117
அல் நஸர் அணி 5 – 2 என்ற கோல் கணக்கில் அல் ஷபாப் அணியை வீழ்த்தியது.
கிங் சாம்பியன் கோப்பை தொடரின் காலிறுதியில் அல் நஸர் மற்றும் அல் ஷபாப் அணிகள் மோதின.
பரபரப்பாக தொடங்கிய இந்தப் போட்டியில் அல் நஸரின் செகோ ஃபோபானா (Seko Fofana) 17வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
அடுத்த 7 நிமிடங்களில் அல் ஷபாப் அணியிடம் இருந்து பதிலடி கிடைத்தது.
அந்த அணியின் கார்லோஸ் (Carlos) 24வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து 28வது நிமிடத்தில் அல் நஸர் அணியின் சாடியோ மானே (Sadio Mane) கோல் அடித்தார்.
பின்னர் அப்துல்ரஹ்மான் கரீஃப் (45+4வது நிமிடம்) கோல் அடிக்க, முதல் பாதியில் அல் நஸர் அணி 3-1 என முன்னிலை வகித்தது.
அதன் பின்னரான இரண்டாம் பாதியின் 74வது நிமிடத்தில், அல் நஸரின் நட்சத்திர வீரர் ரொனால்டோ மிரட்டலாக செயல்பட்டு கோல் அடித்தார்.
இது இந்த ஆண்டில் மட்டும் அவர் அடித்த 50வது கோல் ஆகும்.
அதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் அல் ஷபாப் அணிக்கு ஹட்டன் பஹெபிரி மூலம் மேலும் ஒரு கோல் கிடைத்தது.
எனினும் முகமது மரன் (Mohammed Maran) அபாரமாக கோல் அடிக்க, இறுதியில் அல் நஸர் 5 – 2 கோல் வித்தியாசத்தில் அல் ஷபாப் அணியை வீழ்த்தியது.
முன்னதாக ரொனால்டோ, “ஐரோப்பாவில் நான் கொடுத்ததை விட இரண்டு மடங்கினை (வெற்றி) அல் நஸருக்கு வழங்குவேன்” என கூறியிருந்தார்.
அவரது வாக்கின்படி அல் நஸர் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.