நாடு வங்குரோத்து நிலையடைந்துள்ளது என்று எவ்வித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடனை செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது மட்டுமே தற்போது இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற முடியாமல் போயிருந்தால், பொருளாதார நெருக்கடி மேலும் உக்கிரமடைந்திருக்கும் என கலாநிதி நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அடுத்த தேர்தலில் வெற்றிபெறும் எந்தவொரு அரசாங்கமும் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது அவசியம் என மத்திய வங்கியின் ஆளுநர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.