Home » புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தும் கூகுள் மேப்..

புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தும் கூகுள் மேப்..

by namthesamnews
0 comment
இன்றைய காலகட்டத்தில் வாகன ஓட்டிகளின் வரப்பிரசாதமாக இருப்பது கூகுள் மேப் செயலியாகும்.
எளிதான வழிகளை காட்டுவதும், போக்குவரத்து நெரிசலை காட்டுவதும் மட்டுமல்லாமல் கையாள எளிமையாகவும் இருப்பதால் பலரும் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டமாக ஈக்கோ ஃப்ரெண்ட்லி ரூட்டிங் (Friendly routing) எனும் புதிய அம்சத்தை மேப் செயலியில் கூகுள் அறிமுகப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த அம்சமானது குறைந்த எரிபொருள் பயன்பாடு உடைய பாதைகளை காட்டும்.
எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த புதிய அம்சம், வாகன ஓட்டிகளிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார், பைக் போன்ற பயனர்கள் பயன்படுத்தும் வாகனத்திற்கு ஏற்ப இதனை தகவமைத்துக் கொள்ள முடியும்.
அப்டேட் செய்யப்பட்ட பின்னர், கூகுள் மேப் செயலியின் வலது ஓரத்தில் மேல்பகுதியில் உள்ள புரொஃபைல் போட்டோவை க்ளிக் செய்து, செட்டிங்ஸ்க்கு சென்று, நேவிகேஷன் செட்டிங்ஸை தேர்வு செய்த பின்னர் அதில் ரூட் ஆப்ஷன்ஸ் என்று காட்டும்.
இதில் ப்ரிஃபர் ஃப்யூயல் எஃபிசியன்ட் ரூட்ஸ் என்று இருப்பதை ஆன் செய்த பின்னர் உங்கள் வாகனத்தின் என்ஜின் டைப்பை தேர்வு செய்தால் போதுமானது.
இந்த புதிய அம்சத்தின் மூலம் எரிபொருள் சிக்கனத்துடன் கூடிய வழித்தடத்தில் நீங்கள் வாகனத்தை இயக்கிக்கொள்ளலாம்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00